தூத்துக்குடி
மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கணேசபுரம் பகுதியில் Q பிரிவு ஆய்வாளர் திருமதி விஜய அனிதா தலைமையில்
உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ்,செல்வகுமார், தலைமை காவலர்
ராமர், இருதயராஜ், காவலர் பழனி
பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று
கொண்டிருந்த லோடு வேனை சோதனை செய்தபோது, அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 43 மூடைகளில் சுமார் 1250 கிலோ எடை கொண்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைப் பண்டல்கள்
இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட திருச்செந்தூர் ஆலந்தலை
பகுதியை சேர்ந்த தொம்மை என்பவரின் மகன் ராஜா(29), மற்றும்
தூத்துக்குடி மாணிக்கபுரம் பகுதி வேல் என்பவரின் மகன் பாலமுருகன் (35) ஆகிய இருவரையும் Q பிரிவு போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த பீடிஇலை பண்டங்கள் மற்றும்
கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லோடு வேனையும் பறிமுதல் செய்தனர் .
தூத்துக்குடி
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிறுமியிடம் தங்க செயின் பறித்த திருடன் கைது!
அடுத்த
வெம்பக்கோட்டை மாரியம்மன் கோவில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் : 1001 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026